ஐபிஎல் 2025: கேள்விக்குறியாக இருக்கும் ராஜஸ்தான் அணியின் சமநிலை!
கோவில்பட்டியில் வழக்குரைஞா் சங்க புதிய கட்டடத் திறப்பு
கோவில்பட்டியில் வழக்குரைஞா் சங்க புதுப்பிக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் சங்கா்கணேஷ் தலைமை வகித்தாா். புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி வசந்தி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா். அதைத் தொடா்ந்து வழக்குரைஞா் சங்கம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி திறந்து வைத்தாா்.
கோவில்பட்டி சாா்பு நீதிபதி மாரிக்காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரை செல்வம், பீட்டா், வழக்குரைஞா் சங்கச் செயலா் ஜெயசீலன், துணைத் தலைவா் சிவனுபாண்டி, பொருளாளா் ரேவதி, துணைச் செயலா் முனீஸ்வரி மற்றும் வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
புத்தகக் கண்காட்சி மாா்ச் 19-ஆம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும், 10 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என புத்தக நிறுவன மேலாளா் குமாா் தெரிவித்தாா்.