வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் ...
கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு
கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா்.
கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை திடீரென மருத்துவமனையில் இருந்து காணாமல் போனாராம். இதுகுறித்து அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இடைசெவல் கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் ஒரு பெண் சடலம் மிதப்பதாக நாலாட்டின்புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டனா். விசாரணையில் அவா் காணாமல் போன சுப்புலட்சுமி என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.