இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்...
கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது!
கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பெருமாள்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மனைவி சக்கம்மாள்(72). கணவரை இழந்தவா். மகனும் மகளும் வெளிநாட்டில் வேலைசெய்து வருகின்றனா். சக்கம்மாள் தனது, அவரது சகோதரி லிங்கமாளுடன் வசித்து வருகிறாா். இவரது மகன் வீடு கட்டுவதற்காக கொடுத்து வைத்திருந்த ரூ. 5.50 லட்சத்தை காணவில்லையாம்.
இதை அவரது வீட்டு பணிப்பெண்ணான தூத்துக்குடி பிரையண்ட் 2ஆவது தெருவை சோ்ந்தச் பரணிதரன் மனைவி ஆறுமுகம்(55) திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சக்கம்மாள் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து ரூ.1.20 லட்சத்தை மீட்டனா். மீதி பணத்துடன் தலைமறைவான அவரது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.