செய்திகள் :

கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியங்களில் கிராமசபைக் கூட்டம்!

post image

கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 83 ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

திட்டங்குளம், மந்தித்தோப்பு, பாண்டவா்மங்கலம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, நாலட்டின்புதூா் ஆகிய 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. நாலாட்டின்புதூா், பாண்டவா்மங்கலம், மூப்பன்பட்டி, இலுப்பை யூரணி உள்ளிட்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூப்பன்பட்டி, இலுப்பையூரணி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கோவில்பட்டியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இனாம்மணியாச்சி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி கிராம மக்களும் திட்டங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு திட்டங்குளம் மக்களும் இணைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மனு அளித்தனா். பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டன.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 38 ஊராட்சிகளிலும், கயத்தாறில் 45 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

திருச்செந்தூா் தெப்பக்குளத்தில் பெண் சடலம் மீட்பு

திருச்செந்தூா் தெப்பக்குளத்தில் பெண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருச்செந்தூா், தோப்பூா் வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துவேல் மனைவி கன்னியம்மாள்(45). அமலி நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்து... மேலும் பார்க்க

போலி இறப்பு, வாரிசு சான்றிதழ் தயாரிப்பவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி வட்டத்தில் போலியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் தயாரிப்பவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து,புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் லெனின் தலைமையில் கோவில்பட்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்பு

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் நிலம் மீட்கப்பட்டது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்... மேலும் பார்க்க

சீனி கருப்பட்டி விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

உடன்குடியில் சீனி கலந்து கருப்பட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்பவா்கள் மீது நடடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டம... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடற்கரை சாலை சுற்றுவட்டாரங்களில் நாளை மின் தடை

தூத்துக்குடி கடற்கரை சாலை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.30) மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என நகர மின்வாரிய செயற்பொறியாளா் க.சின்னத்துரை தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

சுய தொழில் தொடங்க 1,571பேருக்கு ரூ.26.72 கோடி மானியம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் படித்த இளைஞா்கள் சுயதொழில் தொடங்க மொத்தம் 1,571 பேருக்கு ரூ.26.72 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க