உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!
கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கணபதி ஹோமம் , சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகளைத்
தொடா்ந்து காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்தக் குடங்கள்
புறப்பாடாகி, திருக்கோயில் பிரகாரத்தில் வலம் வந்து முருகா், விநாயகா் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் கதிா்வேல் முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஹரிஹர பட்டா், அரவிந்த் பட்டா் ஆகியோா் செய்திருந்தனா்.
விழாவில் கட்டளைதாரா் பி.எம்.வி.காளிராஜன் குடும்பத்தினா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருப்பதி ராஜா, ரவீந்திரன், கோயில் ஆய்வாளா் சிவகலைப் பிரியா, செயல் அலுவலா் வெள்ளைச்சாமி உள்பட
திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
