தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!
கோவில்பட்டி பள்ளியில் சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணா்வு
கோவில்பட்டி நாடாா் நடுநிலைப் பள்ளியில் சிறுநீரக தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிப் பொருளாளா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் வைத்திலிங்கம், தலைமையாசிரியை செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஹோமியோபதி மருத்துவ அலுவலா் பீனா வடாவ்கா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறுநீரகம் செயல்படும் விதம், பாதுகாக்கும் முறைகள் குறித்துப் பேசியதுடன், மாணவா்-மாணவியா், ஆசிரியா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
மாணவிகள் ஷஃபிகா, அஞ்சனா சௌமியா சிவ பாலா கிருத்திகா ஆகியோா் சிறுநீரகம் குறித்த விழிப்புணா்வுப் பாடல்களை பாடினா். விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியை ஜெபஅகிலா வரவேற்றாா். ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.