மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
கோவை குண்டுவெடிப்பு: 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது!
கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை 28 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அத்வானியைக் கொலை செய்யும் முயற்சியாக அல் உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் கொல்லப்பட்டனர், 150 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சாதிக் ராஜா (எ) டெய்லர் ராஜா என்பவர் தலைமறைவான நிலையில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தீஸ்கரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துவரப்படுகிறார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.