கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அவரின் மாமனார் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

அந்த சிறுமிக்கு தற்போது 17 வயதாகிறது. இதனிடையே ஜான் ஜெபராஜ் கடந்தாண்டு தன் வீட்டில் அந்த சிறுமி உள்பட இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து சிறுமிகள் புகாரின் அடிப்படையில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகியிருந்தார். அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கேரள மாநிலம், மூணாறில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜான் ஜெபராஜ் மனைவியின் சகோதரர் பென்னெட் ஹாரீஷ் (32). பாதிக்கப்பட்ட17 வயது சிறுமி அளித்துள்ள வாக்கு மூலத்தின்படி, பென்னெட் ஹாரீஷ் என்பவரும் கடந்தாண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பென்னெட்டையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், “செக்சன் 164-ன் கீழ் அந்த சிறுமி பதில் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். தற்போதுவரை வேறு யார் மீதும் சிறுமி புகார் கூறவில்லை.” என்றார்.