Singer Sathyan: "குழிதோண்டிப் புதைப்பது மாதிரியான செயல்; தயவுசெய்து செய்யாதீர்" ...
கோவை தண்டவாளத்தில் குழந்தை பிணம்: நரபலி சந்தேகத்தில் போலீஸார் விசாரணை!
கோவை இருகூர் அருகே தண்டவாளத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை பிணமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடலை கைபற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, அடுத்த இருகூர், ராவுத்தூர் தரைப்பாலம் அருகே தண்டவாளத்தில் ஆண் குழந்தை பிணமாகக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குத் தண்டவாளத்தில் ஒன்றரை வயதான ஆண் குழந்தை பிணமாகக் கிடந்தது. உடனே காவல் துறையினர் அந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கு இடையே அந்த குழந்தையின் உடல் அருகே மஞ்சள், குங்குமம், வெட்டப்பட்ட கோழியின் உடல் ரத்தம் ஆகியவை கிடந்தது. இதனால் அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியது ஒன்றரை வயது குழந்தை தண்டவாளப் பகுதியில் நடந்து செல்ல வாய்ப்பில்லை, எனவே அந்த குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம், என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் குழந்தையின் உடல் கிடந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கல்வி பிடிக்கவில்லை, இது குறித்து காவல் துறையினர் கூறும்போது.ஒன்றரை வயதுக் குழந்தை எப்படி? உயிரிழந்தது என்பது தெரியவில்லை, ரயிலில் சென்றபோது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நரபலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது, அதற்கான எந்த அடையாளமும் இல்லை, அதற்கான வாய்ப்பு அந்த பகுதியில் இல்லை, எனவே அந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்றும் காவல் துறை தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.