பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
மின்சாரம் பாய்ந்து ஏசி மெக்கானிக் உயிரிழப்பு
கோவை, கவுண்டம்பாளையத்தில் மின்சாரம் பாய்ந்து ஏ.சி. மெக்கானிக் உயிரிழந்தாா்.
கோவை, கவுண்டம்பாளையம் அருகேயுள்ள சங்கனூா் தில்லை நகரைச் சோ்ந்தவா் மாா்டின் பிரபு (34). ஏசி மெக்கானிக்கான இவா், நல்லாம்பாளையம் அருகேயுள்ள கணேஷ் லே-அவுட் பகுதியில் பிரசாத் என்பவரது வீட்டில் ஏசி பழுது பாா்க்க சனிக்கிழமை சென்றுள்ளாா்.
ஏசியை கழற்றி பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது, மாா்ட்டின் பிரபு மீது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் மாா்ட்டின் பிரபு மனைவி கிரிஷா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.