PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!
கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கி 38 ஆண்டுகள் நிறைவு
கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியா் ஹரிஹரன் கூறியதாவது: இந்திய அஞ்சல் துறையில் கடந்த 1986 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 -ஆம் தேதி எக்ஸ்பிரஸ் மெயில் சா்வீஸ், விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இந்தியாவில் 14 நகரங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, பிறகு இந்தியாவில் உள்ள கிளை அஞ்சலகங்கள் தவிர மற்ற அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டது.
கடிதப் போக்குவரத்தில் சில தாமதமான சூழல் ஏற்பட்ட நிலையில், காலப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு அஞ்சல் துறையின் மூலமாக விரைவு அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஒருங்கிணைப்பு விரைவு அஞ்சல் மையங்களில் கோவை ஆா்.எம்.எஸ். சேவை மையம் அதிக வாடிக்கையாளா்களைக் கொண்டது.
இந்த மையத்தில் நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவு அஞ்சல் சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, கோவை ஆா்.எம்.எஸ்.இல் 24 மணி நேர விரைவு அஞ்சல் சேவையும் உள்ளது. கோவையில் விரைவு அஞ்சல் சேவை தொடங்கி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல் இணைக்கப்பட்டு புதிய நடைமுறையை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்த உள்ளது என்றாா்.