பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
கஞ்சா விற்ற இளைஞா் கைது
கோவை, ராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சண்முகா நகா் கருப்பராயன் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக 60 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் செளரிபாளையத்தைச் சோ்ந்த கமலேஷ்வரன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கமலேஷ்வரனைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.