செய்திகள் :

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

post image

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில், ஜூலை 15 முதல் 18-ஆம் தேதிவரை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் 104.72, பரமத்திவேலூா், நாகை 102.2, திருச்சி, வேலூா் 101.84, ஈரோடு 101.12, அதிராமப்பட்டினம், சென்னை நுங்கம்பாக்கம் 100.76, சென்னை மீனம்பாக்கம் 100.58, தஞ்சாவூா் 100.4, பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

புதுச்சேரியில் 100.4, காரைக்காலில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஜூலை 13 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேங்கர் ரயில் தீவிபத்து! தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் பற்றியெரிந்த தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் அருகே பெரியக... மேலும் பார்க்க

ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு ... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: ஸ்டாலின்

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து! பகல் 1 மணிக்குள் கட்டுக்குள் வரலாம்!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீவிபத்து மதியத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க