கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -...
கோவை: 78 வயது பெண்ணை வல்லுறவு செய்தவர் கைது!
கோவையில் 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை அடுத்த பேரூர் பகுதியில் 78 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இவரது வீட்டின் அருகே கூலி வேலை செய்யும் பாலன் என்ற பாலமுருகன் (41) வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக பாலனின் மனைவி அவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டார்.
இதனிடையே, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மூதாட்டிக்கு அவ்வப்போது தேவையான உதவிகளை பாலன் செய்து வந்துள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி மூதாட்டி வீட்டுக்கு பல்பு மாட்டுவதற்காக சென்ற பாலன், அவரின் கைகளை கயிற்றால் கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று பாலன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க : எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!
இந்த நிலையில், மூதாட்டியை தொடர்ந்து பல முறை வல்லுறவு செய்துள்ளார் பாலன். இதனால், பாலனுக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் தஞ்சமடைந்துள்ளார் மூதாட்டி.
இதுகுறித்து மூதாட்டியிடம் சிலர் விசாரித்தபோது, உண்மையை தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் பாலனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 78 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.