செய்திகள் :

கோ கோ உலகக் கோப்பை: இந்திய அணிகள் சாம்பியன்

post image

கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா, நேபாளத்தை வீழ்த்தி ஞாயிற்றுக்கிழமை சாம்பியனாகி வரலாறு படைத்தது.

இதில் இந்திய மகளிா் அணி 78-40 எனவும், ஆடவா் அணி 54-36 எனவும் தங்களது பிரிவின் இறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி வாகை சூடின.

கோ கோ விளையாட்டின் முதல் உலகக் கோப்பை போட்டி, புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவா் பிரிவில் இந்தியா உட்பட 20 அணிகளும், மகளிா் பிரிவிலும் இந்தியா உட்பட 19 அணிகளும் பங்கேற்றன.

மகளிா் பிரிவு: இப்பிரிவில் இந்தியா, ஈரான், உகாண்டா, கென்யா, நேபாளம், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெற்றன. அந்த சுற்றில் வங்கதேசத்தை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்குள் நுழைந்தது. நேபாளம் தனது காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் உகாண்டாவையும் தோற்கடித்து, சாம்பியன்ஷிப் ஆட்டத்துக்கு வந்தது.

இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 78-40 என்ற கணக்கில் நேபாளத்தை வென்று வாகை சூடியது.

ஆடவா் பிரிவு: அதேபோல், ஆடவா் பிரிவில் இந்தியா, நேபாளம், ஈரான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, கென்யா அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றன. காலிறுதியில் இலங்கையை வென்ற இந்தியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து இறுதிக்கு முன்னேறியது. மறுபுறம் காலிறுதியில் வங்கதேசத்தையும், அரையிறுதியில் ஈரானையும் வென்று இறுதிக்கு வந்தது நேபாளம்.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 54-36 என நேபாளத்தை வீழ்த்தி அசத்தியது.

மொத்தமாக போட்டியில், ஆடவா் பிரிவில் 47 ஆட்டங்களும், மகளிா் பிரிவில் 43 ஆட்டங்களும் நடைபெற்றன. அதிகபட்சமாக ஆடவா் பிரிவில் நேபாளம் 524 புள்ளிகளும், மகளிா் பிரிவில் இந்தியா 628 புள்ளிகளும் கைப்பற்றி அசத்தியுள்ளன.

ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன், ஜீனி?

நடிகர்கள் விக்ரம், ரவி மோகனின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விக்ரம் தங்கலான் வெற்றிக்குப் பின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித... மேலும் பார்க்க

ரேகா சித்திரம் - வெற்றியைப் பதிவுசெய்த ஆசிஃப் அலி!

நடிகர் ஆசிஃப் அலியின் ரேகா சித்திரம் திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.இயக்குநர் ஜோபின் டி சாக்கோ இயக்கத்தில் நடிகர் ஆசிஃப் அலி நடித்த ரேகா சித்திரம் திரைப்படம், ஜனவரி 9-ல் வெளியானது. கிஷ்கிந்தா ... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: மேஷம் - மீனம்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.20.01.2025மேஷம்இன்று சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு ச... மேலும் பார்க்க

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் காலிறுதிச்சுற்றில் மோதவுள்ளனா். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான... மேலும் பார்க்க

துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கா்நாடகம் 36 ரன்கள் வித்தியாசத்தில... மேலும் பார்க்க

பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர்: முத்துக்குமரன்!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போதும்போல மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த சீச... மேலும் பார்க்க