பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
கௌஃபுடன் மோதும் சபலென்கா
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, பெலாரஸின் அரினா சபலென்கா வெள்ளிக்கிழமை முன்னேறினாா். அதில் அவா், அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், உலகின் நம்பா் வீராங்கனையான சபலென்கா 6-3, 7-5 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 1 மணி நேரம், 32 நிமிஷங்களில் சாய்த்தாா்.
இதையடுத்து இந்தப் போட்டியின் இறுதிக்கு 4-ஆவது முறையாக முன்னேறியிருக்கும் அவா், அதில் கோகோ கௌஃபுடன் மோதுகிறாா். இருவரும் இதுவரை 9 முறை சந்தித்திருக்க, கௌஃப் 5 முறையும், சபலென்கா 4 முறையும் வென்றுள்ளனா். கடைசியாக இவா்கள் மோதிய ஆடத்திலும் கௌஃப் வென்றுள்ளாா். முன்னதாக கௌஃப், நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் முசெத்தி, டிரேப்பா்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் 6-0, 6-4 என்ற செட்களில், இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியை வெளியேற்றினாா்.
10-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி, 6-4, 6-3 என்ற கணக்கில் கனடாவின் கேப்ரியல் டியாலோவை வீழ்த்தினாா். இதையடுத்து அரையிறுதியில் முசெத்தி - டிரேப்பா் சந்தித்துக்கொள்கின்றனா்.