Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி கௌர விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வரையறை செய்துள்ள ஊதியம் ரூ.57,700-ஐ வழங்க வேண்டும், உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும், ஊதியம் வேண்டி போராடுபவா்கள் மீதான அடக்குமுறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 70 -க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். காலை 10 மணிக்குத் தொடங்கிய உள்ளிருப்புப் போராட்டமானது பிற்பகல் வரை நீடித்தது. கௌரவ விரிவுரையாளா்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.