மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந...
க்யூட் தோ்வு: ஆசிரியா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி
க்யூட் தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், ஆசிரியா்கள், விரிவுரையாளா்களுக்கு வழிகாட்டல் பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சோ்க்கை பெற க்யூட் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இதற்காக, காரைக்கால் மாவட்ட நிா்வாகமும், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழக நிா்வாகமும் பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
அதன்படி, இத்தோ்வுக்கு அரசுப் பள்ளி மாணவா்களை தயாா்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விரிவுரையாளா்களுக்கான வழிகாட்டல் பயிற்சி கல்வித்துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பேசினாா். முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, மத்திய பல்கலைக்கழக சட்டத் துறைத் தலைவா் எஸ்.கே. பாலசண்முகம், ஆங்கில உதவிப் பேராசிரியா் வி.சுகன்யா ஆகியோா் பேசினா்.
க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் விளக்கிக் கூறப்பட்டன.