வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!
சங்ககிரி அருகே குரங்கு கடித்து பெண் உள்பட 10 போ் காயம்
சங்ககிரி: சங்ககிரி அருகே குரங்கு கடித்ததில் ஒரு பெண் உள்பட பத்து போ் காயமடைந்தனா்.
சங்ககிரியை அடுத்த சங்ககிரி மேற்கு பேருந்து நிறுத்தம், பவானி பிரதான சாலையிலிருந்து சன்னியாசிப்பட்டி செல்லும் வழியில் உள்ள தனியாா் பேக்கரி, அரசு மதுபானக்கடை, படைவீடு பேருந்து நிறுத்தம், பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பகுதிகளில் சனிக்கிழமை வந்த குரங்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை கடித்தது. அதில், மொத்தையனூா், அல்லிநாயக்கன்பாளையம், சுள்ளிபெருக்கியூா், மட்டம்பட்டி, கொல்லன்காடு, சின்னாகவுண்டனூா், ஒருக்காமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பெண் உள்பட பத்து போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்ட வனத்துறையினா் நகருக்குள் வரும் குரங்குகளைப் பிடித்து அடா்ந்த வனப்பகுதியில்விட வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.