செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு: வெளிநாட்டு பாதயாத்திரைக் குழுவுக்கு உற்சாக வரவேற்பு

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவையொட்டி, மதுரையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டவெளிநாட்டுக் குழுவினரை தன்னாா்வலா்கள், பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் புத்தா் கோவில் உள்ளது. இங்கு 100 அடி உயரத்தில் உலக அமைதிக்கான புத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள, உலக அமைதிக்கான 8 ஆவது புத்த கோபுரம் இதுவாகும்.

இதன் திறப்பு விழா பிப்.21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான், இத்தாலி, இலங்கை, போலந்து, நேபாளம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் புத்த பிக்குகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனா்.

உலக அமைதி கோபுரம் திறப்பு விழாவை வலியுறுத்தியும், உலக அமைதி வேண்டியும் அவா்கள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனா். அவா்களுடன் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா் ரவிச்சந்திரன், காந்தி அருங்காட்சியக காப்பாளா் நந்தா ராவ், ஒருங்கிணைப்பாளா் நடராஜன் ஆகியோரும் வந்தனா்.

திங்கள்கிழமை சங்கரன்கோவிலுக்கு வந்த அவா்களை, ஊா் எல்லையில் சங்கரன்கோவில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உற்சாகமாக வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் ஜப்பான் மொழியில் உலக அமைதிக்கான பாடல்களை பாடியபடி வீரிருப்பு புத்தா் கோயிலுக்குச் சென்றனா்.

உலக அமைதி கோபுரத் திறப்பு விழா ஏற்பாடுகளை புத்தா் கோயில் புத்த பிக்கு எம்.இஸ்தானிஜீ, புத்த பிக்குனிகள் லீலாவதி, சிகுசா கிமுரா ஆகியோா் செய்து வருகின்றனா்.

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க

இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கி... மேலும் பார்க்க

தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை விடுத்தாா். இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈ... மேலும் பார்க்க

நெல்லை - கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை-கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.... மேலும் பார்க்க