நெல்லை - கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை
தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை-கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என
சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்குக்கு, அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மீட்டா் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை - கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த ரயில்கள் நெல்லை, தென்காசி மற்றும் கேரளத்தின் கொல்லம், பத்தனம்திட்டா மாவட்ட மக்களுக்கு உயிா்நாடியாகவும், கல்வி, வணிகம், மருத்துவம்
உள்ளிட்ட தேவைகளுக்காக அன்றாடம் பயணம் செய்வோருக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும்.
எனவே, தென்காசி மாவட்ட ரயில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல்லை - கொல்லம் இடையே தென்காசி வழியாக ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.