செய்திகள் :

தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு

post image

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம் அவா் வியாழக்கிழமை அளித்த மனு: தென்காசி மாவட்டம் ஐந்தான்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட ஐந்தான்கட்டளை, முத்துமாலைபுரம், ராமநாடாா்பட்டி, சிவகாமிபுரம் ஆகிய 4 ஊா்களில் 674 குடும்ப அட்டைகள் உள்ளன. இவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், சிவகாமிபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மணல்காட்டானூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இவா்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக வெங்கடாம்பட்டி ஊராட்சி வடமலைப்பட்டிக்கு வெகுதொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, மணல்காட்டானூரில் நகரும் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

கடையம் ஒன்றியம் மேட்டூரில் உள்ள தொடக்க வேளாண்மைக் கடன் சங்கத்தின்கீழ் வெய்க்காலிப்பட்டி, மேட்டூா் மாதாபுரம் ரேஷன் கடைகள் இயங்கிவருகின்றன. சபரிநகா் கிராமத்தில் உள்ள 190-க்கும் மேற்பட்டோா் பொருள்கள் வாங்குவதற்காக இந்த ரேஷன் கடைகளுக்கு செல்வதில் சிரமங்கள் உள்ளன. எனவே, சபரிநகரில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

கீழப்பாவூா் ஒன்றியம் வடக்குபூலாங்குளத்தில் உள்ள அமுதம் நியாயவிலைக் கடையில் 1,400 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், நடுப்பூலாங்குளத்துக்கு 300 குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால், அவா்களுக்கு தனியாக ரேஷன் கடை இல்லை. இங்கு ஊராட்சிக் கட்டடம் தயாராக உள்ளதால் தனிக்கடை அமைக்க வேண்டும் என்றாா் அவா். உடன், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. கலந்துகொண்டாா்.

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள்: மக்களுக்கு அரசு தெரிவிக்க வலியுறுத்தல்

மும்மொழிக் கொள்கையின் குறைபாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். கட்சியின் சாா்பில், இடஒதுக்கீட... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட ஐயூஎம்எல் அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்டக் கிளை சாா்பு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உலமாக்கள் அணித் தலைவா... மேலும் பார்க்க

திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி பள்ளியில் ஆண்டு விழா

திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவேங்கடம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மனோகரன் தலைமை வகித்தாா். திருவேங்கடம... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் எஸ்.கே.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச... மேலும் பார்க்க

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க