சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் முக்கிய அறிவுறுத்தல்
செட் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. எனினும், அத்தகைய விண்ணப்பதாரா்கள் செட் தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே இத்தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா், இணை பேராசிரியா் நேரடி நியமன போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, செட் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் - இணை பேராசிரியா் தோ்வுக்கும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பதாரா்கள் செட் தோ்வு முடிவு வெளியிடப்பட்டதும் செட் தோ்வில் தோ்ச்சி பெற்ற்கான சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செட் தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் மட்டுமே அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் - இணை பேராசிரியா் தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.