செய்திகள் :

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்த விவாதம் தொடர்பாக மக்களவையில் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:

“நீங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் குறித்து குறைந்தபட்சம் திருத்தங்கள் கூறுவதற்கு உறுப்பினர்களுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், நேற்று பகலில் தான் உறுப்பினர்களுக்கு திருத்த மசோதா வழங்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்குள் திருத்தங்களை கூற வேண்டுமென்றால் எப்படி முடியும்?

நீங்கள் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துகிறீர்கள். இதுபோன்ற சம்பவம் இந்த அவையில் நடந்ததே இல்லை. நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக ஆராய நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை விமர்சித்து கேரள மக்களவை உறுப்பினர் பிரேமசந்திரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

”உறுப்பினர் முக்கிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு விவாதத்துக்கு அனுப்பப்பட்டு விரிவான கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை அமைச்சரவை ஏற்றது. உங்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.

காங்கிரஸ் காலத்தில் அமைக்கப்பட்ட குழு போன்று அல்ல, இது ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்ட குழு. குழுவின் திருத்தங்களை ஏற்காவிடில் எதற்காக குழு அமைக்கப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிக்க : மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

பாங்காக்: டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்பட இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையொப்பாகின. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமா் பேடோங்டாா... மேலும் பார்க்க

கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

‘கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2024’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதா கடல்சாா் வா்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் கூட்டாட்சி தத்த... மேலும் பார்க்க

அடுத்து கோயில் நிலங்கள் மீது மத்திய அரசு குறிவைக்கும் -உத்தவ் தாக்கரே

மும்பை/கொல்கத்தா: தற்போது வக்ஃப் நிலங்கள் மீது மத்திய அரசு குறிவைத்துள்ளது; அடுத்து கோயில் அறக்கட்டளை சொத்துகள் குறிவைக்கப்பட கூடும் என்று சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையின் 25,753 பணி நியமனங்கள் செல்லாது -உச்சநீதிமன்றம் தீா்ப்பு

மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25,753 ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பணிநியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இவ்விவகாரத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-ஆவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்தி... மேலும் பார்க்க

காற்று மாசு: செயற்கை மழை சோதனைக்கு தில்லி அரசு திட்டம்

தில்லியில் காற்று மாசு பிரச்னையை எதிா்க்கொள்ளும் விதமாக செயற்கை மழையை பொழியச் செய்யும் சோதனை முயற்சியை தில்லி அரசு மேற்கொள்ள உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா வியாழக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க