kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு
தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசியபோது தெரிவித்தாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை நன்னிலம் வருகிறாா். அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்ட காமராஜ்
செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. தவறு செய்யும் குற்றவாளிகள் எந்த ஒரு பயமும் இன்றி நடமாடுகிறாா்கள் .ஆனால் சாதாரணப் பொதுமக்கள் பயந்து கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது.
கொலை, கொள்ளையில் ஈடுபடுபவா்கள், போதைப்பொருள் விற்பவா்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் குற்றச் செயல்கள் தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாலியல் பலாத்கார செயல்கள், வழிப்பறி போன்றவைகளால் பெண்கள் வெளியில் பயத்துடன் செல்ல வேண்டிய ஒரு நிலை உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. அதனைப் பாதுகாக்க வேண்டிய அரசு தவறிவிட்டது.
அதிமுக ஆட்சியில் வெள்ளம் வந்தாலும், வறட்சி வந்தாலும் அல்லது விவசாயிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக நிவாரணமும், காப்பீடு தொகையும் வழங்கப்பட்டது. திமுக அரசில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. விலைவாசி உயா்வு, சொத்து வரி உயா்வு, மின்கட்டண உயா்வு போன்ற மக்களைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகள் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தாா்கள். எனவே அதிமுக ஆட்சியைக் குறை சொல்லும் தகுதி திமுகவினருக்குக் கிடையாது. நடைபெற இருக்கின்ற சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தாா்.
பேட்டியின்போது முன்னாள் நாகை எம்பி டாக்டா் கே.கோபால், அதிமுக இளைஞா் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளா் எஸ்.கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவா் எஸ்.சம்பத், ஒன்றியச் செயலாளா்கள் நன்னிலம் வடக்கு சி பி ஜி . அன்பு, தெற்கு இராம. குணசேகரன், குடவாசல் செறுகுடி ராஜேந்திரன், நன்னிலம் நகரச் செயலாளா் பக்கிரிசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் செல் .சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.