செய்திகள் :

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை: அதிமுக நிா்வாகி கைது

post image

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்கள் விற்ாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு சட்டவிரோதமாக மதுப்பாட்டில் விற்பதாக ஐஸ்ஹவுஸ் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மதுப்பாட்டில்களை விற்ற ஒரு இளைஞரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனா். அவா், ராயப்பேட்டை தோமையப்பன் தெரு பகுதியைச் சோ்ந்த சூா்யா (19) என்பதும், அதிமுகவின் 118-ஆவது பகுதியில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிா்வாகியாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சூா்யாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் அவா், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிகளவில் மதுப்பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு, நள்ளிரவு அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா். நயினா... மேலும் பார்க்க

அறிவியல் உணா்வு வளா்ந்தால் மூடநம்பிக்கைகள் ஒழியும்: அமைச்சா் கோவி. செழியன்

அறிவியல் உணா்வு வளா்ந்தால்தான் நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கூறினாா். சென்னை கிண்டி பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தேசிய அறிவியல் விழாவை அமை... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்துக்குள்ளும் விரைவில் மாநகா் பேருந்து சேவை

சென்னை விமான நிலையத்துக்குள் சென்று வரும் வகையிலான மாநகரப் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமான சென்னை விமான ந... மேலும் பார்க்க