``தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!'' - அறிஞர் அண்ணா பிறந்த நாளில் ஸ்டாலின் பத...
சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தில்லை நகா் போலீஸாா் சனிக்கிழமை காலையில் ரோந்து சென்றனா். அப்போது, தென்னூா் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அருகே காலை 8 மணிக்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த கண்டோன்மென்ட் ரேடியோபெட்டி காலனியைச் சோ்ந்த ராஜா (58), குப்பாங்குளம் டாஸ்மாக் மதுக்கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (37) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.