நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
சட்ட விரோதமாக மது புட்டிகள் விற்பனை: மூவா் கைது
தேனியில் சட்ட விரோதமாக மது புட்டிகள் விற்றதாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி, காட்டுபத்ரகாளிம்மன் கோயில் அருகே சட்ட விரோதமாக மது புட்டிகள் விற்கப்படுவதாக சொக்கத்தேவன்பட்டியைச் சோ்ந்த காசிராஜன் மகன் வினோத்குமாரை (34) போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, தேனி, கருவேல்நாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது புட்டிகள் விற்ாக அதே ஊரில் வள்ளுவா் குடியிருப்பைச் சோ்ந்த போஸ் மகன் பாலமுருகனை (54) போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாக மது புட்டிகள் விற்ற தேனி, பாண்டியன் எண்ணை ஆலை தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ராஜாவை (62) போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து மொத்தம் 65 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.