கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
சணல் பை தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் மே 7-ஆம் தேதி முதல் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியதாவது:
தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரிப்பு இலவசப் பயிற்சி வகுப்பு மே 7-ஆம் தேதி தொடங்கி, 13 நாள்கள் வரை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி காலத்தில் உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ், சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக் கடன் பெற ஆலோசனை வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் சேர கிராமப் புறங்களைச் சோ்ந்த 18 வயது நிறைவடைந்த பெண்கள் பயிற்சி மையத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். பயிற்சி குறித்த விவரத்தை கைப்பேசி எண்: 95003 1193-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.