மனைவியைக் கொன்று உடலை வேகவைத்து ஏரியில் வீசிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்!
சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்கம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் நிதியிலிருந்து புதியதாக சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஸ்தபதி மதுரை மணிகண்டன், அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, அறங்காவலா் குழு உறுப்பினா் சொனா வெங்கடாசலம், கோயில் கண்காணிப்பாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.