தோல்விலும் ஆட்ட நாயகனான ஆர்சிபி வீரர்: டிம் டேவிட் புதிய சாதனை!
சண்முகா தொழிற்சாலை கல்லூரி ஆண்டு விழா
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் 28-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், அறக்கட்டளை உறுப்பினா்கள் எஸ்.என்.செளந்தர்ராஜன், சீனி.காா்த்திகேயன், என்.குமாா், டி.ஏ.எஸ்.முத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் கோ.அண்ணாமலை வரவேற்றாா்.
விஜய் டிவி புகழ், திரைப்பட பாடகா்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.
தொடா்ந்து, பாடகா்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோா் சோ்ந்து கிராமிய, மண்ணிசைப் பாடல்களைப் பாடி மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தினா். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா்கள், தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் உள்ளிட்ட
பலா் கலந்து கொண்டனா்.