செய்திகள் :

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டா மலைகளின் வனப்பகுதியில் திங்கள்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது, அங்குப் பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழு இரண்டு வாரங்களுக்கும் மேலாக, நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சலைட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும் அவரிடமிருந்த 303 துப்பாக்கியையும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.

ஏப்ரல் 21 முதல் தொடங்கப்பட்ட எண்கவுண்டர் நடவடிக்கையில் இதுவரை 4 பெண் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!

புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று(மே 6) தெரிவித்திருப்பதாவது: நாளையிலிருந்து இந்தியா - பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு: பிரதமர் மோடி

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவாா்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் முன்கூட்டியே தெரியுமா? பொறுப்பின்றி பேசுகிறார் கார்கே - பாஜக

பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்து... மேலும் பார்க்க

ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற இருவர் கங்கையில் மூழ்கி பலி!

ஐஐடியில் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற இரு இளைஞர்கள் கங்கையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே கங்கையில் க... மேலும் பார்க்க

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தெரியுமாம்! -காங். விமர்சனம்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்கிற சந்தேகத்தை அவர் மீது எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.பஹல்காம் ... மேலும் பார்க்க

கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சர் கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட, ஒபுலாபுறத்தில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டப்ப... மேலும் பார்க்க