இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்
காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை திருவள்ளூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி சாலையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட துணை தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக அரசு ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள அரசாணையை ரத்து செய்து சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யவும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.