பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
சமந்தா தயாரித்து, நடித்த படத்தின் டிரைலர்!
நடிகை சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
இதில் நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமந்தாவும் நடித்திருக்கிறார்.
நெட்பிளிக்ஸில் வெளியாகி இந்தியளவில் கவனம் ஈர்த்த ‘சினிமா பண்டி’ படத்தின் எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி எழுத்தில், இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் கணவனுக்கு ஏற்படும் நெருக்கடிகள் என நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக இது உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: மூன்றாவது குழந்தையைத் தத்தெடுத்த ஸ்ரீலீலா!
இப்படம் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பீரியர் காலம், சீரியல் பார்க்கும் பேய் என ரசிகர்களை இது கவர்ந்து வருகிறது.