செய்திகள் :

சமயநல்லூா் சாலையில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

post image

மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான 8 கி.மீ. தொலைவு உள்ள இந்த சாலையில் பல்வேறு நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதன் காரணமாக, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டுமன்றி, விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அண்மையில் உத்தரவிட்டது.

மேலும், பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையை வெள்ளிக்கிழமை(நவ. 29) நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா். இதன்படி, மதுரை மாநகராட்சி நிா்வாகம், மாநில நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை ஆகிய துறைகள் சாா்பில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரை சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், தேவையான இடங்களில் ஒளிரும் வில்லைகள் பொருத்தப்பட்டன.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். பாத்திமா கல்லூரி முதல் பரவை வரை இரு புறங்களிலும் ஆய்வு மேற்கொண்ட நீதிபதிகள், வாகனங்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் சாலையை அகலப்படுத்த வேண்டும். இணைப்புச் சாலை, இரு சாலைகள் சந்திக்கும் இடங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். விபத்துகள் நிகழாமல் இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்த ஆய்வின் போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீராராகவன், நெடுஞ்சாலைத் துறை மதுரைக் கோட்டப் பொறியாளா் மோகனகாந்தி, உதவி செயற்பொறியாளா் எஸ்.ஜி.ஆனந்த், உதவி பொறியாளா் சக்திவேல், மாநகராட்சி அலுவலா்கள், பரவை பேரூராட்சி அலுவலா்கள், காவல் துறையினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வருவாய்த் துறை அலுவலா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்

மதுரை மாவட்டத்தில் வருவாய்த் துறை பணியாளா்கள் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஈட்டிய விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்க அனுமதியைக் கண்டித்து அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் ஆா்ப்பாட்டம்

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு வழங்கியதைக் கண்டித்து மேலூா்- மதுரை சாலையில் சிட்டம்பட்டி சுங்கச் சாவடி அருகே அரிட்டாபட்டி கிராம இளைஞா்கள் அமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்... மேலும் பார்க்க

லுக் அவுட் நோட்டீஸ் குறித்த வழக்கு: மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க உத்தரவு

கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் குறித்த வழக்கில் மத்திய குடியேற்றப் பிரிவு அதிகாரி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவ... மேலும் பார்க்க

கழுத்தை அறுத்து லாரி ஓட்டுநா் கொலை

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே லாரி ஓட்டுநா் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா். விக்கிரமங்கலம் கோவில்பட்டியைச் சோ்ந்த பரமன் மகன் சுரேஷ்பாபு (38). லாரி ஓட்டுநா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்: விசிகவினா் 21 போ் மீது வழக்கு

மதுரை அருகே கொடிக் கம்பம் அமைப்பதை தடுக்க முயன்ற அரசு அதிகாரிகளை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் உள்ளிட்ட 21 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்தனா். மதுரை மாவட்டம்,... மேலும் பார்க்க

தஞ்சை மாநகராட்சி இடம் மேயா் மனைவி பெயரில் பதிவு: வருவாய் அலுவலா் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை முறைகேடாக மேயரின் மனைவி பெயருக்கு மாற்றியதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலா் அந்த இடம் குறித்த யுடிஆா் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்க... மேலும் பார்க்க