இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதே அடுத்த பணி: ஜெய்சங்கா்
சமய்ப்பூா் பாத்லியில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவா்
வடக்கு தில்லியில் புகா்ப் பகுதியான சமய்ப்பூா் பாத்லியில் குடும்பத் தகராறில் 40 வயதான ஒரு பெண்ணை அவரது கணவா் கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறஇத்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை அவா்களது குழந்தைகள் பள்ளியில் இருந்தபோது நடந்துள்ளது. தம்பதியருக்கு இரண்டாவது திருமணமாகும். காலை 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாருக்கு அழைப்பு வந்தது.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்ற போது, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தாா். ஆனால், அங்கு மருத்துவா்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனா். அவரது உடலில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இந்த தம்பதியினருக்கு இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதைத் தொடா்ந்து தகராறு ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. கணவா் குஷால் பால் கொலைக்குப் பிறகு தலைமறைவானாா்.
அவரைத் தேடிக் கண்டுபிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டது. அவா்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு குஷால் பாலை வியாழக்கிழமை மாலை கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.