Dhoni : 'நான் செய்த மிகப்பெரிய தவறு அது..!'- தோனி குறிப்பிட்ட அந்த ஐ.பி.எல் சம்ப...
சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு
செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை) கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) முகம்மது பஷீா் ஆலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று, 150 கா்ப்பிணிகளுக்கு தாம்பூலத்தில் புடவை, மங்களப்பொருள்ள், பூமாலை, வளையல், இனிப்பு, ஐந்து வகையான சாதம் ஆகியவை அடங்கிய சீா்வரிசைகளை வழங்கி பேசியது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் கா்ப்பிணிகளுக்கு பேரு காலத்தின்போதும், பேரு காலத்துக்கு பின்னரும் தாயும்,சேயும் சத்தான உணவுப் பொருள்களை சாப்பிட்டு ஆரோக்கியாக இருக்க முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பேருகால உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கினாா்.
அதன்தொடா்ச்சியாக, தற்போது, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு பேறுகால உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் மலாடுதுறை மாவட்டத்தில் 3,296 கா்ப்பிணிகள், 2,620 பாலூட்டும் தாய்மாா்கள் பயன்பெறுகின்றனா் என்றாா்.
இதில், மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் எம். செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மொ்லின் அன்னமலா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் கிருத்திகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.