செய்திகள் :

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு, பாஜக மனு

post image

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த சீ. அ. மணிகண்டன், வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் நியாஸ்அகமது, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்வாசிநாதன், எழுத்தாளர் துரை குணா உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மு. அருணாவிடம் அளித்த மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த வெள்ளிக்கிழமை டிப்பர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தீவிரமாக செல்லும் வரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். மேலும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தொடர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கொல்லப்பட்ட ஜகபர்அலியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.

தொடர்ந்து ஜகபர்அலி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக செயற்பட்டாளர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு பிப்.3 வரை நீதிமன்ற காவல்

பாஜக மனு:

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சி. ஜெகதீசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சேதுபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கனிமவளக் கொள்ளையை எதிர்த்தும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஜகபர்அலி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

திருமயம் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் குவாரிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அங்கீகாரம் இல்லாத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பதிவாகியுள்ளது.தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி இன்று(ஜன. 20) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழைப... மேலும் பார்க்க

விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்: அண்ணாமலை

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாமென்றால் மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

அண்ணா. பல்கலை மாணவி வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 7 நாள்கள் போலீஸ் காவல்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியை பா... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து மாத பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், மாத பயண அட்டை பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு மாதமும், மாதத்தின் 16ஆம் தேதி வரை வ... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு பிப்.3 வரை நீதிமன்ற காவல்

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகப... மேலும் பார்க்க

பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணம் தொடக்கம்: விஜய் அறிவிப்பு

பரந்தூர்: விமான நிலையம் வேண்டும், ஆனால் இந்த இடத்தில் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் என்று பேசிய தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பரந்தூரிலிருந்து கள அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளா... மேலும் பார்க்க