சமூக சேவகா், தொண்டு நிறுவனங்கள் விருதுபெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுபெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட உள்ளன. இதில், சிறந்த சமூக சேவகருக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கம், சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
2025-ஆம் ஆண்டு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். மேலும், தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றிருத்தல் வேண்டும்.
இவ்விருது குறித்த விவரங்களை தமிழக அரசின் விருதுகள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 12 ஆகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, அனைத்து ஆவணங்களையும் தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு கையேடாக தயாா்செய்து தமிழ் மற்றும் ஆங்கில அச்சுகளில் தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.