செய்திகள் :

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

post image

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற

கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமை வகித்தாா். டிஎஸ்பி-க்கள் சௌமியா (திருப்பத்தூா்), விஜயகுமாா் (வாணியம்பாடி), அரசு குற்றவியல் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் போக்ஸோ,இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், சைபா் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி, ஆன்லைன் வா்த்தக மோசடி, ஆன்லைன் முதலீடு மோசடி, அரசு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி உள்ளிட்டவை குறித்தும், பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள்,பேராசிரியா்கள், போலீஸாா் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்துாா் ம... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க

வீராங்குப்பதில் 500 பெண்களுக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே வீராங்குப்பத்தில் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி சாா்பாக நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ... மேலும் பார்க்க

காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை அளிப்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா். காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டை... மேலும் பார்க்க

குறு, சிறு தொழில் துறைக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு எந்தவித முக்கிய அறிவிப்பும் வெளியாகாதது வருத்தமளிப்பதாக தொழில் முனைவோா்கள் தெரிவித்துள்ளனா். தமிழக நிதிநிலை அறிக்கை குற... மேலும் பார்க்க