`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின் சாடல்
கும்பமேளாவை ஒட்டி டெல்லியில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் 18 பேர் மரணமடைந்த நிகழ்வு, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாமல் கூட்டம் கூட்டமாக சிரமப்பட்டு பயணிக்கும் மக்களுக்கு, வசதி ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக AC 3 Tier பெட்டிகளை இணைத்து உத்தரவிட்டுள்ளது.
MK Stalin Tweet
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல தரப்புகளில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூக வலைதளம் முழுக்க இரயில் #பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!" என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.