செய்திகள் :

சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ - நாளை மாபெரும் இறுதிப்போட்டி!

post image

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை - மார்ச் 16) நடைபெறவுள்ளது.

சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் போட்டி களைகட்டியது. தொலைகாட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

மதுரையில் தொடங்கிய சீசன் - 2 போட்டிகள் தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், காரைக்குடி,விழுப்புரம், திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், தென்சென்னை, வடசென்னை ஆகிய இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது. வெவ்வேறு ஊர்களிலிருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றனர். ஒவ்வொரு ஊர்களிலும் இரண்டு கட்டங்களாக போட்டி நடைபெற்றது. கடும் போட்டியாளர்களுக்கு மத்தியில் மொத்தம் 46 பேர் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகினர்.

பாஸ்ட் ஃபுட் கலாசாரம் அதிகரித்து வரும் காலத்தில் வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும், வெரைட்டியாகவும் சமைக்கலாம் எனப் போட்டியாளர்கள், பார்வையாளர்கள், வாசகர்கள் என அனைவரது மனதிலும் ஆழமாக பதிய வைத்த சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனியில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியை எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சி, அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், நாகா, லலிதா ஜூவல்லரி, மில்கி மிஸ்ட், இந்தியன் ஆயில், சௌபாக்யா கிச்சன் அப்ளையன்சஸ், கீதம் ரெஸ்டாரென்ட்ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோ... மேலும் பார்க்க

லிப்ஸ்டிக் சட்னி டு தொட்டாச்சிணுங்கி கூட்டு- அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்களால் கமகமத்த சென்னை

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 12-வது இடமாக தென் சென்ன... மேலும் பார்க்க

Health: தெரியாத கீரை; ஆனால், சாப்பிட வேண்டிய கீரை அது... ஏன் தெரியுமா?

நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல... மேலும் பார்க்க