மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் ...
ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீா்ப்பாய உறுப்பினா் அபூா்வா
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாய நிா்வாக உறுப்பினராக அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின்கீழ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பாயத்தின் நிா்வாக உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகள், வழிகாட்டுதல்கள் அல்லது உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.