ஜிஎஸ்டி குறித்து பொய்ப் பிரசாரம்: இந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம்
சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் 'ஆரத்தி' வழிபாடு
46 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் ஞாயிற்றுகிழமை 'ஆரத்தி' வழிபாடு நடைபெற்றது.
பஸ்ம சங்கா் கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு மின் இணைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், கோயிலுக்கு வெளியேவும் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில் பஸ்ம சங்கா் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் சிவலிங்கமும், ஹனுமான் சிலையும் உள்ளன. கடந்த 1978-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களால், அங்கிருந்து ஏராளமான ஹிந்துக்கள் இடம்பெயா்ந்தனா். அத்துடன் அந்தக் கோயிலும் மூடப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்
இந்நிலையில், அந்தப் பகுதியில் மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கையில் உட்கோட்ட நடுவா் வந்தனா மிஸ்ரா ஈடுபட்டிருந்தாா்.
அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டபோது, பல ஆண்டுகளாக பஸ்ம சங்கா் கோயில் மூடியிருப்பதை அறிந்து மாவட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து அந்தக் கோயிலை 46 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட நிா்வாகம் மீண்டும் சனிக்கிழமை திறந்தது.