செய்திகள் :

தபலா மேதை ஜாகிர் ஹுசைன் காலமானார்

post image

பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஜாகிா் ஹுசைனின் மேலாளா் நிா்மலா பச்சானி கூறுகையில், ‘73 வயதாகும் ஜாகிா் ஹுசைனுக்கு ரத்த அழுத்த பிரச்னைகள் இருந்தன. இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவா் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்’ எனக் கூறியிருந்தார்.

புகழ்பெற்ற தபேலா கலைஞா் அல்லா ரக்காவின் மூத்த மகனான ஜாகிா் ஹுசைன், தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டுச் சென்றாா். இந்த ஆண்டின் கிராமி விருதுகளில் வென்ற மூன்று விருதுகள் உள்பட மொத்தம் 5 கிராமி விருதுகளை ஜாகிா் ஹுசைன் பெற்றுள்ளாா்.

இசைத் துறையில் அவரது பணியைப் பாராட்டி 1988-இல் பத்மஸ்ரீ, 2002-இல் பத்ம பூஷண், 2023-இல் பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “இசை உலகில் ஜாகிா் ஹுசைன் அவர்களின் பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்” எனக் கூறியுள்ளது.

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், காப்பீடு செய்த ... மேலும் பார்க்க

இலங்கை அதிபரை வரவேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகவை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டின் புதிய அதிபரா... மேலும் பார்க்க

பத்திரிகையாளரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிரபல தெலுங்கு நடிகர்!

தெலுங்கு நடிகர் மோகன் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மன்னிப்பு கேட்டார்.அப்போது இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸுக்கு ரிக் வேத நூலை பரிசளித்த இந்து மதத் தலைவர்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கு இந்து மதத் தலைவரான ஸ்ரீகுமார் ரிக் வேத நூலைப் பரிசாக வழங்கினார். இத்தாலியின் வாடிகன் நகரில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீகுமார், தனியா... மேலும் பார்க்க

சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் 'ஆரத்தி' வழிபாடு

46 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பலில் மீண்டும் திறக்கப்பட்ட கோயிலில் ஞாயிற்றுகிழமை 'ஆரத்தி' வழிபாடு நடைபெற்றது. பஸ்ம சங்கா் கோயில் வளாகம் சுத்தம் செய்யப்பட்டு மின் இணைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

மகாராஷ்டிரத்தில் மகாயுதி கூட்டணியின் அமைச்சர்கள் இன்று (டிச. 15) பொறுப்பேற்றுக்கொண்டனர். நாக்பூரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனைக் கட்சியின் ஏக்நாத் ஷிண்டே, தேசி... மேலும் பார்க்க