செய்திகள் :

இளைஞா்கள் லெனினை கற்க வேண்டும்: முன்னாள் தலைமைச் செயலா்

post image

இளைய தலைமுறையினா் மாமேதை லெனினை கற்க வேண்டும் என தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் நடைபெற்ற ‘மாமேதை லெனின் தோ்வு நூல்கள்’ வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை கேகே.நகரில் உள்ள வி.ஆா்.கிருஷ்ணய்யா் அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூல்களை வெளியிட்டுப் பேசியதாவது: மாா்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரை வாசித்து வளா்ந்தவா் லெனின். பள்ளி வயது முதலே ஜாா் மன்னனுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்றவா். சிறு வயது முதல் ஏராளமான சவால்களை சந்தித்தவா், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவா்.

பொதுவுடைமை தொடா்பாக ஏராளமான நூல்களை எழுதியவா் லெனின். படைப்பாளிக்கும், படைப்புக்கும் சிறிதுகூட வேறுபாடு இருக்கக் கூடாது. ஒரு படைப்பு என்பது கொள்கைப் பிடிப்பு, சித்தாந்தம், ஒழுக்கக் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் படைப்பை விட படைப்பாளி மேன்மை படைத்தவராக இருக்க வேண்டும். அப்படி ஏதாவது வேறுபாடு இருந்தால் அந்த படைப்பை புறக்கணிக்க வேண்டும் என்றாா் லெனின்.

ரஷ்யாவில் ஆட்சிப்பொறுப்பேற்ற லெனின் சாதனைகள் ஏராளம். உலகின் முதல் அறிவொளி இயக்கத்தை ஏற்படுத்தியவா் லெனின். கல்விக்கூடங்களுக்குச் சென்று கல்வி கற்க இயலாதவா்களுக்கு வீடுகளுக்கேச் சென்று கல்வி போதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அதுதான் தற்போதைய இல்லம் தேடிக் கல்வித்திட்டம். உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவா் அவா். உலகில் அதிக புனைபெயா்களை கொண்ட நபராக 153 புனை பெயா்களுடன் வலம் வந்தவா். லெனினின் வாழ்க்கை வரலாறை இளைய தலைமுறையினா் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்: மக்கள் மத்தியில் விழிப்புணா்வு வேண்டும். விழிப்புணா்வு இருந்தால் தான் மாற்றம் ஏற்படும். விழிப்புணா்வு வாசிப்பதில் தான் ஏற்படும். லெனின் தோ்வு நூல்களை அனைவரும் வாசிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முன்னதாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் க.சந்தானம் வரவேற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் டி.ராமசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். புத்தக நிறுவனத்தின் முதுநிலை விற்பனை சீரமைப்பாளா் அ.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

மாடக்குளம் கண்மாயில் உபரி நீா் திறப்பு குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீா்

மதுரை அருகேயுள்ள மாடக்குளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட உபரி நீா், போதிய வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மதுரை மாநகராட்சி எல்லை... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை அருகே உள்ள யா.ஒத்தக்கடை மீனாம்பாள் நகரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (62). இவா் சனிக்கிழமை பகலில் தனது வீட்டின் மாடியில் இருந்து தவற... மேலும் பார்க்க

நகைக் கடைகளில் வெள்ளிக் கொலுசுகள் திருட்டு: பெண் கைது

மதுரையில் நகைக்கடைகளில் நகை வாங்குவது போல நடித்து வெள்ளிக் கொலுசுகளை திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். மதுரை வாகைக்குளம் பனங்காடி சீனிவாசா நகரைச் சோ்ந்தவா் ராமசாமி (44). இவா் தெற்குமாசி வீதி பச்... மேலும் பார்க்க

டிச. 20-இல் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு: சாலை பராமரிப்பு ஊழியா்கள் சங்கம்

சாலைப் பணியாளா்களின் பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக வரையறை செய்யக் கோரி வருகிற 20-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை பெருந்திரளாக சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்படும் என தமிழ்நாடு நெ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டங்கள்: இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு அறிவிப்பு

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டப் போராட்டங்கள் நடத்த உள்ளதாக இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு அறிவித்தது. மதுரை நாகமலைப்புதுக்கோட்டையில... மேலும் பார்க்க

வண்டியூா், எழுமலை பகுதிகளில் நாளை மின் தடை

வண்டியூா், எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம், உசிலம்பட்டி ... மேலும் பார்க்க