டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மேலூா் பேருந்து நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பேசியதாவது: தமிழக அரசு அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யுமாறு சட்டப்பேரவையில் தீா்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
இதற்கு முன்னதாக கிராமசபைக் கூட்டங்களில் எதிா்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்ப்படட்டது. அரிட்டாபட்டியில் பழைமையான தமிழ்மொழி கல்வெட்டுக்களை அழிக்க மத்திய அரசு முயல்கிறது என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா் கே.சாமுவேல்ராஜ், புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், நகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினா் க.பொன்னுதாய், எஸ்.பாலா, எஸ்.பி.இளங்கேவன், மாவட்டக் குழு உறுப்பினா் எம்.கண்ணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவா் என்.பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.