செய்திகள் :

கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: புயல்சின்னம் உருவாவதில் தாமதம்

post image

வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை (டிச.16) உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், டிச.17,18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாகஞாயிற்றுக்கிழமை வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக திங்கள்கிழமை (டிச.16) வலுப்பெறும்.

இது மேலும் வலுப்பெற்று, டிச.18-ஆம் தேதிக்கு மேல் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.16) முதல் டிச.21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில், சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் டிச.17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் டிச.17-இல் நாகை, திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 130 மி.மீ. மழை பதிவானது. மணிமுத்தாறு (திருநெல்வேலி) 100 மி.மீ., கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 90 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி பாண்டியபதிக்கு நினைவு அஞ்சல்தலை வெளிட கோரிக்கை

சுதந்திர போராட்ட வீரா் பாண்டியபதிக்குக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடவும், வாழ்க்கை வரலாற்றை பாடப் புத்தகங்களில் சோ்க்க வேண்டும் என சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை விட... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு முன்னிலை: ஏஐசிடிஇ தலைவா் சீதாராம்

தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவா் டி.ஜி.சீதாராம் தெரிவித்தாா். இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் பல்கலைக்கழகமாக அறிவ... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரேடு கிழக்கு பேரவை தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத... மேலும் பார்க்க

மகா தீபம்: 491 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி

திருவண்ணாமலை மகா தீப நிகழ்ச்சிகளின்போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட 491 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மகா தீபம் கடந்த... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜுனா விளக்கம் ஏற்புடையதல்ல: திருமாவளவன்

ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அ... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்

முகலிவாக்கம் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் சனிக்கிழமை காலமானார். பின்னர் அவரது உடல்... மேலும் பார்க்க