சில்லறைத் தட்டுப்பாட்டால் பால் விலை உயா்வு: அன்புமணி கண்டனம்
செய்யாறில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
செய்யாறில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 17) நடைபெறும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு மாதமும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, செய்யாறு மின் வாரிய கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 17) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
செய்யாறு மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் செய்யாறு மின் வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜூ தெரிவித்தாா்.