செய்திகள் :

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

post image

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
80,754.66 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.35 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 204.03 புள்ளிகள் குறைந்து 80,582.51 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை அதிகபட்சமாக 700 புள்ளிகள் வரை சரிந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 44.80 புள்ளிகள் குறைந்து 24,667.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பங்குச்சந்தை படிப்படியாக மீண்டு வருகிறது.

நுகர்வோர் பொருள்களைத் தவிர, ஐடி, பார்மா, மின்சாரம், ரியல் எஸ்டேட் என மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக சார்ந்துள்ளன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% சரிந்துள்ளன.

அதானி எண்டர்பிரைஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, எஸ்பிஐ லைஃப் இன்சுரன்ஸ் ஆகிய சில நிறுவனங்கள் ஏற்றமடைந்த நிலையில் ஸ்ரீராம் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக், சன் பார்மா, இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்துள்ள நிலையில் பங்குச்சந்தை இன்று சரிந்து வருகின்றன.

Stock Market Update: Sensex down 200 pts, Nifty below 25,000

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் அதிகரித்துள்ளது.பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்க விருப்பம் காட்டும் விநாயகர் சதுர்த்தி, ஓணம் போன்ற பண்டிகை காலங்களில் நகை... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.... மேலும் பார்க்க

ஜியோமி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

ஜியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜியோமி, இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

புதுதில்லி: மொத்த விற்பனையாளர்கள், சிறு மற்றும் பெரிய சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பு விதிமுறைகளை மத்திய அரசு இன்று முதல் மேலும் கடுமையாக்கியுள்ளத... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

புது தில்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரி குறித்து 'எஃப்ஐஇஓ' (FIEO) கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. மோசமடைந்து வரும் செலவு, போட்டித்தன்மையின் காரணமாக திருப்பூர், நொய்டா மற்றும் ... மேலும் பார்க்க